கோலிவுட்டையே உலுக்கிய இந்தியன் 2 கிரேன் விபத்து... பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 06, 2020, 06:11 PM IST
கோலிவுட்டையே உலுக்கிய இந்தியன் 2 கிரேன் விபத்து... பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி!

சுருக்கம்

இதுவரை அந்த தொகை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கபடாமல் இருந்து வந்த நிலையில், இன்று இந்தியன் 2 விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, பத்திரிகையாளர் மதனின் மருமகன். 10 பேர் படுகாயமடைந்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விபத்து நடந்த சமயத்தில் பலியான மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன் ஆகியோர் அறிவித்திருந்தனர். 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

இதுவரை அந்த தொகை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கபடாமல் இருந்து வந்த நிலையில், இன்று இந்தியன் 2 விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன், பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 90 லட்சம் என மொத்தம் 4 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதுகாப்பாக மீட்கப்பட்ட கிரிஷ்: முத்துவிற்கு வந்த சந்தேகத்தால் குழம்பிய குடும்பம்; சிறக்கடிக்க ஆசை சீரியல்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!