
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி. 'பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பார்வதியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தனர். அதன் பின்னர் 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்தார். சிறந்த நடிகை என்று நடிகர்கள் புகழ்ந்தாலும் பார்வதிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை.
மலையாளத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் அங்கும் படவாய்ப்புகள் குறைவு. இதனிடையே பிரபல கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால் மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது இயக்குநர் அவதாரம் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!
மனதில் பட்டதை பளீச்சென பேசும் பார்வதி, தற்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படி பார்வதியும் லாக்டவுன் நேரத்தில் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!
பார்வதிக்கு மூக்குத்தி குத்திக்கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசையாம். அப்படி தான் மூக்குத்தி குத்திக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அத்துடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மூக்குத்தி குத்திக்கொண்டேன். மூக்குத்தி அணிந்த பிறகு நானும் எனது தாயைப் போல் இருப்பதாக உணர்கிறேன். அம்மா குட்டியைப் போல் ஒரு அம்மிணிக்குட்டி என்று மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வைரல் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.