பரபரக்கும் கல்யாண வேலைகள்... சங்கீத்துக்கு தயாராகிய மிஹீகாவுடன் ரொமான்ஸ் செய்யும் ராணா!

Published : Aug 06, 2020, 06:01 PM IST
பரபரக்கும் கல்யாண வேலைகள்... சங்கீத்துக்கு தயாராகிய மிஹீகாவுடன் ரொமான்ஸ் செய்யும் ராணா!

சுருக்கம்

திருமணத்திற்கு பல வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தாலும், மிகவும் சாவகாசமாக தன்னுடைய காதலியுடன் ராணா, வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியிலாகியுள்ளது.  

இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசக்கூடிய ரேகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

தற்போது ராணா - மிஹீகாவின் திருமணம் வரும் 8ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. முதலில் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ராணா குடும்பத்தினருக்கு  சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவில் திருமணம் நடக்கப்போகிறதாம். அந்த திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், இதனால் நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பு இல்லை என்றும் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், திருமணம் நடைபெற உள்ள இடத்தில் சானிடைசர் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு பார்ட்டி அல்லது வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று மிஹீகாவிற்கு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக சோழிகள் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட ஆபரணம், அதற்கு ஏற்ற போல் மஞ்சள் நிற உடை என மங்களகரமாக தயாராகி உள்ளார் மிஹீகா. இப்படி திருமணத்திற்கு பல வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தாலும், மிகவும் சாவகாசமாக தன்னுடைய காதலியுடன் ராணா, வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியிலாகியுள்ளது.

அந்த புகைப்படங்கள் இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!
வட்டி வசூல் வேட்டையில் ராதிகா – ஊரே தெறித்து ஓடுது: எஸ்கே தயாரிப்பில் வந்த தாய் கிழவி டீசர்!