
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளது.
ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர்ஸ்டார் விளங்குகிறார். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னை அறியாமலே ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் பேச்சு
அதன்படி வருமான வரி தினமான இன்று, வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், அவருக்கு பதில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய தமிழிசை, “பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என பேசினார்.
இதையும் படியுங்கள்... மல்டி டேலன்டட் ஃபிராடு.. 12 கோடி தமிழர்கள ஏமாத்திருக்கீங்க - பார்த்திபனை விடாது கறுப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.