
பழைய இருட்டுபாளையம் என்ற ஊரில் பேய் பங்களா ஒன்றில், தினம் தினம் நடக்கும் பலவித அமானுஷ்ய சம்பவத்தால் அந்த ஊர் மக்கள் பல்வேறு விபரீத பாதிப்புகளால் சிக்கிதவிக்கின்றனர் . இதை பயன்படுத்தி ஒரு கும்பல் அங்கு , அதையே தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஊர்மக்களிடத்தில் பயத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கச்செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு மர்மமாக மாயமாகிவிடுகின்றனர்.
மேலும் செய்திகள்: அட யோகி பாபுவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!
இந்த பின்னனியில் நடந்தது என்ன ? அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் , அவர்கள் என்ன ஆனார்கள் ? வெளிநாட்டிலிருக்கும், அந்த பேய் பங்களாவின் உரிமையாளர் பாண்டியராஜன் திரும்ப அந்த ஊருக்கு வந்தாரா , பங்களாவுக்கு சென்றாரா, என மர்மமான கேல்கிகளிடையே திகில் சம்பவங்களுடன் நகர்கிறது இந்த படத்தின் கதை.
மேலும் செய்திகள்: எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!
திரில்லுக்கும் ,திகிலுக்கும் இடையில் காமெடி சரவெடியாய் படத்தை உருவாக்கி வருவதாகவும் , உண்மை சம்பவத்தை மைய்யமாகக்கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது என்றும் அறிமுக இயக்குனர் கார்த்திக் சிவன் கூறுகிறார். கடந்த சில வருடங்களாகவே குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த பாண்டியராஜன் இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக மாறியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இவருடன் இணைந்து நடிகர் செந்திலும் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.