தேசத்தை திரும்பி பார்க்க செய்த தமிழ் திரையுலகம்.. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல் ,ரஜினி !

By Kanmani PFirst Published Jul 23, 2022, 7:58 PM IST
Highlights

இந்த குழுவினருக்கு உலகநாயகன் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில், சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 10 விருதுகளை பெற்று தமிழ் திரைப்படங்கள் மாஸ் காட்டி உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருது  அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர், சுதா கங்கோரா,  சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூரரை போற்றும் தட்டி சென்றது. அதேபோல மண்டேலா படத்திற்கு சிறந்த திரைக்கதற்கான விருது மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மடோன் அஸ்வினுக்கும் கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு..ரூ.199 காலணிகளுடன் விஜய் தேவரைக்கொண்ட..லிகர் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சாதாரணமாக வந்த நாயகன்

சிவரஞ்சனி இன்னும் பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமௌலி,சிறந்த படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் கிடைத்தது. மொத்தம் 35 பிராந்திய மொழி படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் 150 படங்கள் திரையிடப்பட்டன திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டனர் இவற்றில் தற்போது பத்து வருடங்களை தமிழ் சினிமா பட்டுச்சென்றுள்ளது குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...நடிகர் நரேனுடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மீன்..வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
 
இந்த குழுவினருக்கு உலகநாயகன் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில், சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்

சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan)

 

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியே திருவிழா வாழ்த்துகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்  என கூறியுள்ளார்.

 

தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்

— Rajinikanth (@rajinikanth)

 

click me!