"வேர்ல்ட் கப் ஜெயித்ததற்கு நன்றி" Hiphop ஆதியை ரோஹித் என நினைத்து புகழ்ந்த Fan - ஏர்போட்டில் செம Fun! Video!

By Ansgar RFirst Published Jul 8, 2024, 5:13 PM IST
Highlights

Hiphop Tamizha Adhi : கோவையில் பிறந்து, இன்று கோலிவுட் உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும் நல்ல நடிகராகவும் வலம்வந்து கொண்டிருப்பவர் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

கடந்த 2015ம் ஆண்டு பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கி வெளியிட்ட "ஆம்பள" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 2010ம் ஆண்டு முதல் பல மியூசிக் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு புகழ்பெற்றவர் அவர். 

பொதுவாக அவர் வெளியிடும் இசை ஆல்பங்களுக்கான பாடல் வரிகளையும், இசையையும் அவரே உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு முதல் இப்போது வரை தொடர்ச்சியாக பல முக்கிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படத்தில் 4ம் பாகத்திற்கு இசையமைத்ததும் இவர் தான். 

Latest Videos

தமிழ் பட நடிகையுடன் காதலை உறுதி செய்த சுரேஷ் கோபி மகன் மாதவ்! பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியிட்ட போட்டோஸ் வைரல்!

மேலும் 2017ம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் தமிழ் திரை உலகில் இவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக நல்ல பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்ற ஹிப்ஹாப் ஆதி அவர்களுக்கு, ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்ட தகவலின்படி, தான் விமான நிலையத்திற்கு சென்ற பொழுது தன்னுடன் சேர்ந்து சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்றும், அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அருகில் வந்து அவரும் தன்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறியிருக்கிறார். 

போட்டோ எடுத்து முடித்த அந்த நபர், உலகக் கோப்பையை ஜெயித்துக் கொடுத்ததற்காக நன்றி என்று தன்னை பார்த்து கூறவும், திடுக்கிட்ட அவர், அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்ட, நீங்கள் ரோகித் சர்மா தானே என்று அவர் பதிலுக்கு கேட்டுள்ளார். இறுதியில் தான் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் என்று அவரிடம் கூறிய அங்கிருந்து அவர் புறப்பட்டுள்ளார். 

ஆங்கிலேயருக்கு டிமிக்கி கொடுக்கும் யோகி பாபு.. 80 ஆண்டுக்கு முன் நடந்த True Story - வெளியான Boat பட அப்டேட்!

click me!