தளபதி 69.. யாரெல்லாம் நடிக்க போறாங்க தெரியுமா? 25 நொடி வீடியோவை De-Code செய்து முடித்த Fans!

By Ansgar R  |  First Published Oct 1, 2024, 4:29 PM IST

Thalapathy 69 Characters Intro : தளபதி விஜயின் 69வது திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுகம் இன்று மாலை முதல் துவங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.


"தளபதி விஜய் நடிக்கும்..." அக்டோபர் 2025க்கு பிறகு, இப்படி ஒரு தலைப்பை திரையரங்குகளில் நம்மால் பார்க்க முடியாது என்று நினைக்கும் பொழுது, சினிமா ரசிகர்களாக மிகப்பெரிய சோகம் ஒவ்வொரு ரசிகர்களுக்குள்ளும் எழுகின்றது என்றால் அது மிகையல்ல. தளபதி விஜய், புகழின் உச்சியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், அவர் மிகவும் நேசித்து வந்த சினிமா துறையில் இருந்து விலகி, வேறொரு தளத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த புறப்படுகிறார்.

ஏற்கனவே தனது 68வது பட பணிகளை முடித்த அவர், உடனடியாக தனது 69வது பட பணிகளை துவங்கினார். மேலும் அதற்கான அறிவிப்புகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய "வாரிசு" திரைப்படம் முடிவடைந்த உடனேயே சரசரவென "லியோ" மற்றும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்பட பணிகளை முடித்த அவர், இப்போது தன்னுடைய அரசியல் பயணத்தில் பயணிக்கவிருக்கிறார். 

Tap to resize

Latest Videos

undefined

ஒரே நாளில் சாவித்திரிக்கு கணவராகவும், மகனாகவும் நடித்த ஒரே நடிகர்.. யார் தெரியுமா? 

இந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடக்க உள்ளது அவருடைய தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டை முடித்துக் கொண்டு தன்னுடைய சினிமா உலகின் இறுதி பயணத்திற்கான பணிகளை அவர் துவங்க உள்ளார். 69வது திரைப்படத்தோடு தனது சினிமா பயணத்தை முடிக்க உள்ள அவருக்கு, இது ஒரு மிகச்சிறந்த படமாக அமைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சுமார் ஒரு வருட காலம் இப்படத்திற்கான பணிகளை மேற்கொள்ள இயக்குனர் ஹெச் வினோத் ஆவணம் செய்து இருக்கிறார். 

தளபதி 69 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான அன்றே, அக்டோபர் 2025ல் இந்த திரைப்படம் வெளியாகும் என்கின்ற அறிவிப்போடு படத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மாலை முதல் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்பொழுது படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த வீடியோவை இப்போதே இணையவாசிகள் டிகோட் செய்துள்ள நிலையில் தளபதி 69 திரைப்படத்தில் பிரபல நடிகை மமிதா பைஜு, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியால், ஏற்கனவே தளபதி விஜயுடன் "பீஸ்ட்" திரைப்படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே, தமிழ் திரை உலக நடிகை பிரியாமணி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக இணைய வாசிகள் கணித்திருக்கின்றனர். 

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையாகிறது என்று இன்று மாலை முதல் வெளியாகும் அறிவிப்புகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். சுமார் 1 வருட காலம் என்பதால், நிச்சயம் பல சிறப்பான விஷயங்களை இதில் இணைக்க வினோத் முயல்வர் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமல்ல, இது அரசியல் சார்ந்த ஒரு கமர்சியல் படம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலத்துக்கு புரபோஸ்; வனிதாவின் 4வது கணவர் இவரா?

click me!