திடீரென வெடித்த துப்பாக்கி; காலில் குண்டு பாய்ந்ததால் நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை

Published : Oct 01, 2024, 09:41 AM IST
திடீரென வெடித்த துப்பாக்கி; காலில் குண்டு பாய்ந்ததால் நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை

சுருக்கம்

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பையில் உள்ள கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் மளமளவென கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்துள்ளது. கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கோவிந்தா விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபலங்களும் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்