லப்பர் பந்து.. படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர் - கூடவே அவர் கொடுத்த "அடுத்த பட அறிவிப்பு"!

By Ansgar R  |  First Published Sep 28, 2024, 11:55 PM IST

Lubber Pandhu : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் "லப்பர் பந்து" திரைப்படத்தை பார்த்து அதற்கான விமர்சனத்தை கொடுத்ததோடு, தன்னுடைய அடுத்த பட அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.


தமிழ் திரையுலகில் ஏற்கனவே கிரிக்கெட் சம்பந்தமான பல திரைப்படங்கள் வெளியாகி மெகா ஹிட்டாக மாறி இருந்தாலும், தற்பொழுது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி உள்ள "லப்பர் பந்து" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக மிக மிக குறைந்த பட்ஜெட்டில் சுமார் 200 மடங்கு லாபத்துடன் தற்பொழுது பயணித்து வருகிறது அந்த திரைப்படம். 

"அட்டகத்தி" தினேஷ், ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இரு நபர்களுக்கு மத்தியில் நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை ஒரு கோர்வையாக, மிக நேர்த்தியாக மக்களுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து என்றால் அது மிகையல்ல. 

Tap to resize

Latest Videos

undefined

"மர்மயோகி முதல் தேவர் மகன் 2 வரை" கமல் கடைசி நொடியில் கைவிட்ட டாப் 4 டக்கர் படங்கள்!

பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில் அண்மையில் இந்த படத்தை பார்த்த கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். மேலும் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜயகாந்தின் உருவப்படங்கள், பாடல்கள் மற்றும் காட்சிகளை இப்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை குறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த லப்பர் பந்து திரைப்படத்திலும், நடிகர் தினேஷ் ஏற்று நடித்துள்ள "கெத்து" என்கின்ற கதாபாத்திரத்தில் வரும் நபருக்கு விஜயகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய போஸ்டர்கள் இந்த திரைப்படத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விஜயகாந்தின் பாடல் ஒன்றும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா.. 

"படங்களில் கேப்டனின் புகைப்படங்களோ, திரைப்பட பாடல்களோ பயன்படுத்துவதால் அதற்கு காப்புரிமை கூறும் உரிமை எங்களிடம் இல்லை. காரணம் கேப்டன் எங்களுக்கானவர் மட்டுமல்ல, அவர் மக்களுக்கானவர். ஆகையால் அவருடைய பாடல்களை, காட்சிகளை பயன்படுத்துவதற்காக காப்புரிமையை நாங்கள் எப்பொழுதுமே கேட்க மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.  

இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு அருமையான பதிவினை தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளார். அதில் "என்னோட அடுத்த தமிழ் பட டைரக்ஷன் டீம்.. சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்திருக்கு, கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட், சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்க என்று சொல்லி இருந்தார்கள்.. அந்த படத்தை நானும் பார்த்தேன்.. கிரிக்கெட் மேலே நீங்க வச்ச அந்த காதல் ஜெயிச்சுருச்சு மாறா" என்று கூறி தன்னுடைய வாழ்த்துக்களை கூறியதோடு, தன்னுடைய அடுத்த தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் அவர் ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கிறார். 

என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா 👌🌟 🧨

— Harbhajan Turbanator (@harbhajan_singh)

ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அசத்தியிருந்தார். இனி வரப்போவது அவருடைய இரண்டாவது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தது.

"தரமான கதையா செலக்ட் பண்றாப்லபா" மணிகண்டனின் அடுத்த அவதாரம் - STR வெளியிட்ட டக்கர் போஸ்டர்!

click me!