ஆர்த்தியால் சென்னைக்கு குட் பை சொல்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் நடக்கும் தடபுடலான ஏற்பாடு - Viral Video!

Ansgar R |  
Published : Sep 27, 2024, 07:26 PM IST
ஆர்த்தியால் சென்னைக்கு குட் பை சொல்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் நடக்கும் தடபுடலான ஏற்பாடு - Viral Video!

சுருக்கம்

Jayam Ravi : பிரபல நடிகர் ஜெயம் ரவி விரைவில் தனது அலுவலகம் உள்ளிட்ட பல விஷயங்களை மும்பைக்கு இடம் மாற்றம் செய்ய உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகிறது.

உண்மையில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவர் இடையிலான பிரிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பங்கேற்றாலும், அவர்களுடைய பிணைப்பு என்பது அங்கு தலை தூக்கி நிற்கும் என்றால் அது மிகையல்ல. இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்திரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் ஜெயம் ரவியின் புகைப்படங்களை டெலிட் செய்ததாக சில தகவல்கள் வெளியானது. 

அந்த நிலையில் தான் இந்த தம்பதி அதிவிரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவியது. இருப்பினும் அந்த செய்தி நிச்சயம் பொய்யாகத் தான் இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டார். சுமார் 15 ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்த தானும் ஆர்த்தியும், அந்த பந்தத்தில் இருந்து பிரிந்து தனித்து வாழ இருப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

கைவிரித்த வாலி! 3 நாள் 100 பேரை காக்க வைத்த ஷங்கர்; இந்தியன் பட பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம்?

இருப்பினும் இந்த தகவலை ஜெயம் பரவி வெளியிட்ட ஒரு சில நாட்கள் கழித்து, ஆர்த்தி ரவி மற்றொரு குண்டை தூக்கி போட்டார். அது தான் தன்னுடைய விருப்பம் இல்லாமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவருடன் இணைந்து வாழ தான் ஆசைப்படுவதாகவும் கூறினார். ஆனால் ஜெயம் ரவியோ தன்னுடைய வாழ்க்கையில் ஆர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு அடிமையாக தான் வாழ்ந்து வந்ததாகவும். கடந்த 15 ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். 

தன்னுடைய அனைத்து விஷயத்திலும், குறிப்பாக திரைப்பட விஷயத்தில் ஆர்த்தியின் குடும்பத்தாரின் தலையீடு அதிகம் இருந்ததாலேயே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் ஜெயம் ரவி கூறினார். இந்த சூழலில் தான் கெனிஷா பிரான்சிஸ் என்கின்ற படகியுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

உடனடியாக பொதுவெளியில் தோன்றி கெனிஷா பிரான்சிஸ் குறித்து பேசிய ஜெயம் ரவி "அவர் ஒரு சிறந்த பாடகர், அது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனநல ஆலோசகர். அவர் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்து வருகிறார். ஆகையால் அவரோடு இணைத்து பேசி எங்களுடைய நல்ல நட்பை கொச்சைப்படுத்த வேண்டாம்" என்று காட்டமாக பேசியிருந்தார். 

ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இனி அதிக அளவில் பாலிவுட் படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையில் இருக்கும் தனது அலுவலகம் மற்றும் பிற விஷயங்களை இப்போது மும்பைக்கு அவர் மாற்றம் செய்து வருவதாகவும். இதற்காகத்தான் அவர் இப்போது மும்பை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ஜெயம் ரவி மும்பை சென்றடைந்து அங்கு செய்தியாளர்களிடம் பல விஷயங்களை ஹிந்தியில் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. பாலிவுட் உலகில் உள்ள தயாரிப்பாளர்களுடம் தான் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், தற்போது தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிபன் சாப்பிட சென்ற மனோ.. அந்த கேப்பில் ஒரு மெகா ஹிட் பாடலை எழுதிய வாலி - எந்த பாட்டு தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள்: பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்
ஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன்: பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?