"வாழ்த்துக்கள் தல" கார் ரேஸில் கம்பேக் கொடுக்கப்போகும் அஜித் - வாழ்த்தி வரவேற்கும் நரேன்!

By Ansgar R  |  First Published Sep 24, 2024, 10:36 PM IST

Thala Ajith Kumar : தல அஜித் குமார் 2025ம் ஆண்டு முதல் மீண்டும் கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ளதாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வருகின்றது.


தமிழில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான "அமராவதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் அஜித்குமார். கடந்த 31 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் அவர் இருந்து வருகிறார் என்றால் அதுமிகையல்ல. கோலிவுட் உலகில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற வரிசையில் அஜித் மற்றும் விஜய் என்று இந்த இரண்டு நடிகர்களுக்கு இடையே தான் பெரிய அளவிலான போட்டி தொடக்க முதலிலேயே இருந்து வருகிறது. 

சுமார் 3 1 ஆண்டுகள் கழித்தும் அந்த போட்டி நீடித்து வருகிறது, அதுவும் ஆரோக்கியமான முறையில் நீடித்து வருகிறது. அதற்கு முழுமுதற் காரணம் இந்த இரண்டு நடிகர்களும் தங்களுடைய திரைப்படங்களை கையாண்ட விதமே என்று கூறினால் அது மிகையல்ல. திரைப்படம் என்பதை தாண்டி, இப்போது அரசியல் என்ற பாதையில் தளபதி விஜய் பயணிக்க உள்ள அதே சூழலில், தல அஜித்தும் மீண்டும் பழைய ரூட்டுக்கு செல்லவுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

'கருடன்' பட நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள 'மார்கோ' படத்தின் போஸ்டர் வெளியானது!

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கார் ரேசிங்கில் ஈடுபட்டு வரும் தல அஜித் மீண்டும் தனது கார் ரேஸின் பயணத்தை துவங்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற "ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா" என்கின்ற கார் பந்தயத்தில் பங்கேற்று, அந்த போட்டியில் 12வது இடத்தை பிடித்தார் நடிகர் அஜித். 

அது மட்டுமில்லாமல் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 பந்தயங்களிலும் அவர் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரபல கார் ரேசிங் சாம்பியன் நரேன் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சில தகவல்களின்படி.. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு "ஜிடி ரேசிங்" கேட்டகிரியில் மீண்டும் தல அஜித் களமிறங்க இப்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேசிலும் அவர் மிகவும் துடிப்பாக செயல்படுபவர்" என்று கூறி அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் கார்த்திகேயன்.

BREAKING NEWS!! Just found out that my megastar buddy Ajith Kumar is working hard towards a comeback into motorsports’ GT Racing category in 2025. What a legend he truly is. A phenomenal actor and very quick in a race car too, pic.twitter.com/MtHbSE6PtC

— Narain Karthikeyan (@narainracing)

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து தனது பட பணிகளை முடித்து வருகிறார் தல அஜித். ஏற்கனவே பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்ற படத்தில் நடித்து வரும் அவர், ஒரே நேரத்தில் அப்பட பணிகளையும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் "குட் பேட் அக்லி" பட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

கடைசி உலகப்போர்.. ஹியூமன் vs ஏ.ஐ - 2ம் பாகம் குறித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்த ஆதி!

click me!