ரன்தீப் ஹுடா நடிப்பில் இந்தியில் வெளியான பயோபிக் படமான வீர் சாவர்க்கார் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
சினிமாவை பொறுத்தவரை உலகின் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இவ்விருது விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் போட்டியிடும். அந்த வகையில் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவுக்கான படங்கள் தற்போதே சமர்பிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் லால்பட்டா லேடீஸ் என்கிற திரைப்படம் பிராந்திய மொழி பிரிவில் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தற்போது மேலும் ஒரு இந்திய படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. சுந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் வீர் சாவர்க்கார். இப்படத்தில் ரன்தீப் ஹுடா நாயகனாக நடித்திருந்தார். மேலும் அன்கிதா லோகண்டேவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
இதையும் படியுங்கள்... .தங்கலான் உட்பட 6 தமிழ் படமும் அவுட்... ஆஸ்கருக்கு தேர்வான இந்தி படம்
இந்நிலையில் வீர் சாவர்க்கார் படத்தின் தயாரிப்பாளரான சந்தீப் சிங் இதுகுறித்து போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பெருமையாக இருக்கிறது. எங்களது படம் வீர் சாவர்க்கார் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதை சாத்தியமாக்கிய பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு நன்றி. இந்த பயணம் அற்புதமானது. எங்களுக்கு உதவிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதுதொடர்பாக படத்தின் நாயகன் ரன்தீப் ஹுடா பேசுகையில், சாவர்க்கரின் மொத்த கதையையும் படித்த பின்னர், அவரின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளேன். ஒரு பயோபிக் எடுக்கும்போது அவருக்கு நெருக்கமானவர்கள் இது வேண்டாம் அது வேண்டாம் என சொல்வார்கள். ஆனால் நாங்கள் அவரின் 53 வருட வாழ்க்கையை 3 மணிநேர படத்தில் காட்டியுள்ளோம். இந்த அங்கீகாரமே எங்களுக்கு விருது கிடைத்தது போல உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விஜய், கவின் முதல் இளையராஜா, மணிரத்னம் வரை... இந்த சினிமா பிரபலங்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்தவர்களா?