மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்றதால் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தை கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி, லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் பார்த்த அனைவரும் வடிவேலுவின் நடிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்காக அவரும் தேசிய விருது கிடைக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்படி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவது போல் அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் மாமன்னன் படம் பார்த்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஒரு மாஸ் ஸ்பீச் கேட்க எல்லாரும் ரெடியா? ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா - அப்டேட் இதோ!
முதலில் மாமன்னன் படத்தை ரிலீசுக்கு முன்பே பார்த்த நடிகர் தனுஷ், வியந்து பாராட்டி இருந்தார். இதையடுத்து பார்த்த நடிகர் கமல்ஹாசன், உதயநிதி, மாரி செல்வராஜ் இருவரையும் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று மாமன்னன் படம் பார்த்து அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை தன் வீட்டுக்கு அழைத்து பாராட்டி இருந்தார்.
அதோடு டுவிட்டரில், “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு மாமன்னன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷை குறிப்பிடாததால் அவரை நெட்டிசன்கள் மீம் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் உடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தும் அவரது நடிப்பை ரஜினி பாராட்டாதது தான் தற்போது இந்த விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து போடப்படும் மீம்களும் படு வைரல் ஆகி வருகின்றன.
Nanum nadichirkanu sollunga ya avaruku pic.twitter.com/PqiZrBdrwz
— Muthuvel (@Muthu72318989)Kalaiyan to Thanga meenachi 🤡👌 pic.twitter.com/8MY1P5iA0B
— DEXTER😈 (@Dexter_Vj2)Keerthy now https://t.co/4cFGyg9CTP pic.twitter.com/mjIJiFC6Hz
— Karthik Ravivarma (@Karthikravivarm)இதையும் படியுங்கள்... பட வாய்ப்புகள் குவியும் சமயத்தில்... திடீரென சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா - காரணம் என்ன?