2018 திரைப்படத்தை இயக்கிய ஜோசப், தற்பொழுது ஒரு டூயல் ஹீரோ சப்ஜெக்டுடன் களமிறங்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வழங்க இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் 2018. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களும், ஆனால் அதை தாங்கி மீண்டு வந்த கேரளாவின் கதையையும் மிக நேர்த்தியாக சொன்ன ஒரு திரைப்படம் அது.
95 ஆண்டுகால மலையாள சினிமா வரலாற்றில் இந்த திரைப்படம் ஒரு மையில்கள் என்றால் அது மிகையல்ல. இத்தனை பாராட்டுகளுக்கும் முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப். சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாள திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்திருந்தது.
இதையும் படியுங்கள் : 3 ஹீரோயின்கள்.. 100 கோடி பட்ஜெட் - ஜெயம் ரவியின் ‘ஜீனி’!
இந்நிலையில் அந்த திரைப்படத்தை இயக்கிய ஜோசப், தற்பொழுது ஒரு டூயல் ஹீரோ சப்ஜெக்டுடன் களமிறங்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வழங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய இரு கதாபாத்திரங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் நிவின் பாலியும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
We are excited & thrilled 🤩 about this collaboration with the most happening director 🎬 for our upcoming project! 🤗✨ pic.twitter.com/ORQVMPCWCv
— Lyca Productions (@LycaProductions)இவர்கள் இருவர் இடையேயும் படக்குழு தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
விஜய் சேதுபதி தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல கடைசியாக துறைமுகம் படத்தில் தோன்றிய நிவின் பாலி, தற்போது இரு மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
இதையும் படியுங்கள் : உலக பிகினி தினம்.. கவர்ச்சி உடையில் அசத்திய தமிழ் நடிகைகளின் கிளிக்ஸ்!