சுரேஷ் மேனனுடன் மோதும் நடிகர் மோகன்.! அரசியல் வாதியாக அதிரடிக்காட்டும் வனிதா.! 'ஹரா' லேட்டஸ்ட் அப்டேட்!

Published : Jul 04, 2023, 10:56 PM IST
சுரேஷ் மேனனுடன் மோதும் நடிகர் மோகன்.! அரசியல் வாதியாக அதிரடிக்காட்டும் வனிதா.! 'ஹரா' லேட்டஸ்ட் அப்டேட்!

சுருக்கம்

'ஹரா' திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு வில்லனாக சுரேஷ் மேனன் நடிக்க உள்ளதாகவும், வனிதா விஜயகுமார் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தில் அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் நடிகர் சுரேஷ் மேனன் நடிக்கிறார்.  மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்கிற தகவலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.  எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி 'ஹரா' திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

கனவு நிறைவேறியது... 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்த 'தங்கலான்' படப்பிடிப்பு! நடிகர் விக்ரம் ட்வீட்!

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.  'ஹரா' திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

10 வருடங்கள் ஆகியும் நிறுத்த முடியவில்லை! மஞ்சுளா பிறந்தநாளில் வனிதா பகிர்ந்த மற்றொரு தகவல்! குவியும் வாழ்த்து

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே 'ஹரா' படத்தின் முக்கிய கருத்தாகும். இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் 'கயா முயா...' என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவலையும் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பராசக்தி படம் பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்.... சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
Gana Vinoth : பிக்பாஸ் விட்டு வெளியே வந்த கானா வினோத்! அசத்தலான சர்ப்ரைஸ் ..இணையத்தில் வைரல்!!