
நடிகர் விக்ரம், 'பொன்னியின் செல்வன்' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வந்தார். தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து சமூக நீதி கருத்துக்களை பேசி, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள பா ரஞ்சித், இந்த முறை சற்று வித்தியாசமான கதை களத்தை கையாண்டுள்ளார். 'கே ஜி எஃப்' பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையை படமாக்கி உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க பார்வதி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன் , பசுபதி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மிகப்பிரமாண்டமான பொருட்செலவில், ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் காடு, மலை, சார்ந்த இடங்களிலும், கோலார் தங்க வயல் பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட நிலையில், இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் விக்ரம்.... சில புகைப்படங்களை பதிவிட்டு போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இப்படம் குறித்து விக்ரம் கூறியுள்ளதாவது... 'இன்றுடன் நிறைவடைத்துவிட்டது. என்ன ஒரு பயணம்.... மிகவும் அற்புதமான நபர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்கள் கிடைத்தது. இங்கே நான் பகிர்ந்துள்ள போட்டோவுக்கும் கடைசி புகைப்படத்திற்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இருந்தது. என் கனவை நினைவாக்கியதற்கு ரஞ்சித்துக்கு ஒவ்வொரு நாளும் நன்றி என பதிவிட்டுள்ளார்.அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் ஷுட்டிங் ஆரம்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தற்போது நிறைவடையும் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விக்ரம். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.