ஜெயிலர் படத்தின் முதல் சிங்கள் பாடலான "Kaavaalaa" பாடல் குறித்த முன்னோட்டம் ஒன்று வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலிப் குமார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிற ஜெயிலர்.
இந்த திரைப்படத்தில் கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கடந்த ஜூலை 3ம் தேதி ஜெயிலர் படத்தின் முதல் சிங்கள் பாடலான "Kaavaalaa" பாடல் குறித்த முன்னோட்டம் ஒன்று வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மீண்டும் ஒரு முறை நெல்சன் தனது பாணியில் அந்த ப்ரோமோவை வெளியிட்டு அசத்தியிருந்தார்.
இதையும் படியுங்கள் : நடிகர் தனுஷை மாட்டிவிட்ட ரோபோ சங்கர்!
இந்த பாடலை சிவகார்த்திகேயனின் நண்பரும், பிரபல இயக்குனருமான அருண் ராஜா காமராஜர் எழுதியுள்ளார். அனிருத் இசையில் அந்த பாடல் தயாராகி வருகின்றது. இது ஒரு புறம் இருக்க தற்பொழுது ஜூலை மாதம் 29ம் தேதி சனிக்கிழமை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மாபெரும் அளவில் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தனது படங்களின் Audio Launchகளில் மாஸாக பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேச்சை கேட்க அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : வரிசையாக 4 பிரம்மாண்ட படங்கள் - தன் ஆட்டத்தை ஆரமித்த "நாயகன்"!