‘நல்லா தானே போய்ட்டு இருந்துச்சி’... சோசியல் மீடியாவிற்கு ‘குட்பை’ சொன்ன பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 05, 2021, 10:55 AM IST
‘நல்லா தானே போய்ட்டு இருந்துச்சி’... சோசியல் மீடியாவிற்கு ‘குட்பை’ சொன்ன பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

சுருக்கம்

பிரபல நடிகை திடீரென சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சார்மி கவுர். 2002ம் ஆண்டு சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தொடர்ந்து காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி டாப் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான’பத்து என்றத்துக்குள்ள’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். 

 

இதையும் படிங்க:2 வருஷத்துக்கு கிடையாது... விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட திடீர் கன்டிஷன்...!

நடிகையில் இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சார்மி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக 7 படங்களை தயாரித்துள்ளார், சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘லிகர்’ படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்த சார்மி, லாக்டவுன் காலத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, தயாரிப்பு பணிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். 

சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் பிற நடிகைப் போல படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை சார்மி தன்னுடைய சோசியல் மீடியாக்களில் பதிவிட்டது கிடையாது. கடந்த ஆண்டு கொரோனா குறித்து கேலி செய்ததற்காக சார்மியை நெட்டிசன்கள் ரவுண்ட் கட்டினர். அதுமட்டுமே சோசியல் மீடியாவில் சார்மியால் வெடித்த ஒரே ஒரு சர்ச்சை. அப்படியிருக்க சோசியல் மீடியாக்களை விட்டு விலகுவதாக சார்மி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: கொண்டாட்டத்தில் ‘தல’ பேமிலி... யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ஹேப்பி நியூஸ்...!

சார்மியை இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் பேரும், ட்விட்டரில் 6 லட்சத்திற்கும் அதிகமானோரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சார்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நல்ல விஷயத்திற்காக சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுத்துக் கொள்கிறேன், சீ யூ கைஸ் என பதிவிட்டுள்ளார். சார்மியின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும், வேதனையாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!