பிரபல நடிகரை பொசுக்கென அசிங்கப்படுத்திய வனிதா... என்ன இருந்தாலும் இப்படியொரு வார்த்தையை சொல்லியா திட்டுறது?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 04, 2021, 08:33 PM IST
பிரபல நடிகரை பொசுக்கென அசிங்கப்படுத்திய வனிதா... என்ன இருந்தாலும் இப்படியொரு வார்த்தையை சொல்லியா திட்டுறது?

சுருக்கம்

அவருடைய அனுபவம் என்ன? அவரை அப்படி பேசலாமா? அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா விஜயகுமார்  குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். சில வாரங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியின் ஜட்ஜ் ஆன ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற் பட்டதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா, வேலை செய்யும் இடத்தில் சீனியர் பெண் ஒருவரால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனிதா வெளியேற காரணம் ரம்யா கிருஷ்ணனா என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் இதனை ரம்யா கிருஷ்ணன் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. சோசியல் மீடியாவில் இந்த பிரச்சனை விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த நகுல் காளி வேடத்தில் இருந்த வனிதா மிகவும் கேவலமாக பேசியதாகவும், மேலும் என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவருடைய அனுபவம் என்ன? அவரை அப்படி பேசலாமா? அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “முற்றிலும் ... வேலையில்லாத முட்டாள்களின் உளறல்களைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு என் வாழ்க்கையை பிசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்பதற்கும், பார்வையாளர்களுக்காக பின்னர் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  எனக்கு கொடுத்த  மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என முடிவு செய்தேன். எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!