அழுக்கு லுங்கியில்...செயற்கை காலுடன் பிரபுதேவா! மிரள வைத்த 'பொய்க்கால் குதிரை' ஃபர்ஸ்ட் லுக்!

By manimegalai aFirst Published Aug 4, 2021, 7:38 PM IST
Highlights

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவை வைத்து இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் 'பொய்க்கால் குதிரை' என்பது வெளியிடப்பட்டுள்ளது.
 

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவை வைத்து இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் 'பொய்க்கால் குதிரை' என்பது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ' படத்தை தொடர்ந்து இயக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. எப்போதும் சர்ச்சை கதைகளையே தேடி பிடித்து படம் எடுக்கும் சந்தோஷின் படமா? என ஃபர்ஸ்ட் லுக்கே யோசிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான, 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை சில சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்தது தான். இதை தொடர்ந்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கம் இந்த படத்தில்,  பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன்  கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அழுக்கு லுங்கி, பனியன், செயற்கை காலுடன் கையில் ஒரு குழந்தையை தூக்கி வைத்தபடி உள்ளார் பிரபு தேவா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் பிரபு தேவா, இந்த படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது.  பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார். 

Here’s the of my next movie
directed by pic.twitter.com/9tZCruWZ39

— Prabhudheva (@PDdancing)

click me!