படப்பிடிப்பில் இயக்குநர் நடிகர் சேரனுக்கு ஏற்பட்ட சோகம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Published : Aug 05, 2021, 10:33 AM IST
படப்பிடிப்பில் இயக்குநர் நடிகர் சேரனுக்கு ஏற்பட்ட சோகம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்னும் திரைப்படத்தில், நடித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்னும் திரைப்படத்தில், நடித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு துணை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர்... 'புரியாத புதிர்' படத்தின் சிறு கதாபாத்திரத்திலும் நடித்தார். இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் - மீனா நடித்த, 'பாரதி கண்ணம்மா' படத்தை இயக்கி, முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை இயக்கியது மட்டும் இன்றி, ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

'ஆட்டோகிராப்' படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். அதில் லாஸ்லியா - சேரனுக்கு இடையே இருந்த அப்பா... மகள்... உறவு பார்பவர்களையே நெகிழ வைத்தது. தற்போது திரைப்படங்கள் இயக்காமல் 'ராஜாவுக்கு செக்' மற்றும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  

கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வரும், 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார்.  சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!