பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா... வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பரிதாபம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 7, 2020, 4:11 PM IST
Highlights

அதில், எனக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தேன். அதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் 7 லட்சத்து 21 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் திடீரென இறந்து போக ரசிகர்கள் சோகத்தில் மூழ்குவது தொடர் கதையாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இந்நிலையில் பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, நடிகையான இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி.யாக உள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முரட்டு காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

கடந்த 4ம் தேதி சுமலதாவிற்கு லேசான தலைவலி, தொண்டை எரிச்சல் இருந்துள்ளதுள்ளது. இதனால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட சுமலதா கொரோனா சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சுமலதா அங்கிருந்த படியே கொரோனா தொற்றிற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது 56 வயதாகும் சுமலதாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

அதில், எனக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தேன். அதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நான் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறேன். கடவுள் அருளால் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் நான் விரைவில் குணமடைவேன். என்னை தொடர்புகொள்ள உள்ள நபர்கள் நான் நியமித்து நபரை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

click me!