இளையராஜாவிற்கு பின் நான் நேசித்த இசைமேதை..! விஜய் பட இயக்குனரை கலங்க வைத்த மரணம்..!

By manimegalai aFirst Published Jul 6, 2020, 8:14 PM IST
Highlights

பிரபல இசையமைப்பாளர் மறைவிற்கு, உலகம் முழுவதும் உள்ள இவருடைய ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், 23 ஆம் புலிகேசி, புலி, உள்ளிட்ட  படங்களை இயக்கிய, இயக்குனர் சிம்பு தேவன் கனத்த இதயத்தோடு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

பிரபல இசையமைப்பாளர் மறைவிற்கு, உலகம் முழுவதும் உள்ள இவருடைய ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், 23 ஆம் புலிகேசி, புலி, உள்ளிட்ட  படங்களை இயக்கிய, இயக்குனர் சிம்பு தேவன் கனத்த இதயத்தோடு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் பிரபலமானவரான எனியோ மொரிகோனே உடல் நலக்குறைவால் தன்னுடைய 91 ஆவது வயதில் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த எனியோ படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற ஒன்ஸ் அபான் ஏ டைம் இன்  அமெரிக்கா, தி அண்டச்சபிள்ஸ், சினிமா பாரடைஸ்  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இத்தாலி ரசிகர்களால் மேஸ்ட்ரோ என அன்புடன் அழைக்கப்பட்டார். 2007 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இரு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். 

ரோமில் உள்ள வீட்டில் கீழே தவறி விழுந்ததால் இடுப்பு எலும்பில்  முறிவு ஏற்பட்ட எனியோ, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 91 வயதாகும் எனியோ மொரிகோனேவின் மறைவு இசைப்பிரியர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் பிரபல இயக்குநர் சிம்பு தேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இளையராஜா சாருக்கு பின் நான் மிக நேசித்த இசைமேதை எனியோ மரிகோன். அவர் தனது 91 வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டார். Cowboy இசையை நமக்கு அளித்தவர். எனது 'இரும்புக்கோட்டை' படத்தில் அவரது பாதிப்பு இருக்கும். 1961 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வெளியான 'The Hateful Eight' படம் வரையிலான அவரது பயணம் மறக்கமுடியாதது.  ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

click me!