
கொரோனா லாக்டவுன் காரணமாக திரைத்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் சினிமாவை மட்டுமே வாழ்க்கை நடத்தி வந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்போது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி தவிப்போருக்கு பல உதவிகள் குவிந்தாலும், அவை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஒருபுறம் சினிமாவில் வாய்ப்பில்லாததால் குடும்பத்தை காப்பதற்காக பலரும் காய்கறி விற்பனை, மளிகை கடை, பழ வியாபாரம் என கிடைத்த தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!
மறுபுறம் பொருளாதார சிக்கலில் மாட்டித் தவிக்கும் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல இந்தி சீரியல்களில் நடித்து வந்த சமீர் சர்மா என்ற இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கஹானி கர் கர் கி, கியூன்கி சாஸ் பி கபி பாகு தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் கரண் ஜோஹர், ஷாருக்கான் தயாரித்த படங்களில் நடித்துள்ளார். அதைத் தவிர மாடலிங்கிலும் பிசியாக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!
சமீர் வசித்து வந்த மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்துள்ளது. இதனால் குடியிருப்பின் காவலாளி அளித்த தகவலின் படி, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் கதவை உடைத்து பார்த்த போது சமீர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரேத பரிசோதனையில் சமீர் 2 நாட்களுக்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். லாக்டவுன் நேரத்தில் சமீர் எடுத்த இந்த திடீர் முடிவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.