ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

Published : Jul 24, 2022, 12:49 PM IST
ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

சுருக்கம்

Deepesh Bhan : இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான தீபேஷ் பன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்தியில் மிகவும் பிரபலமான காமெடி கா கிங் கான், பூட்வாலா, காமெடி கிளப், எப்ஐஆர், சன் யார் சில் மார் மற்றும் சேம்ப் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீபேஷ் பன். இவரை மிகவும் பேமஸ் ஆக்கியது பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடர் தான். இதில் மால்கன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தீபேஷ்.

மும்பையில் வசித்து வந்த நேற்று காலை தனது குடியிருப்பு அமைந்துள்ள தாஹிர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்...சிம்பு நடிச்சும் இந்த நிலைமையா...! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ஹன்சிகாவின் மஹா

தீபேஷ் பன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். அவருக்கு தற்போது 41 வயது ஆகிறது. மறைந்த நடிகர் தீபேஷுக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தீபேஷ் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. 

41 வயதில் நடிகர் தீபேஷ் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்து பாலிவுட் வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகர் தீபேஷின் மறைவுக்கு ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...கடைசில இப்படி ஆகிடுச்சே... அஜித்துக்கு பதிலா யாஷிகா..? செம்ம அப்செட்டான ரசிகர்கள்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து