
நட்சத்திர தம்பதிகளான நஸ்ரியா நஜிம் மற்றும் பகத்வாஸில் இன்று அவர்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இது குறித்த நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் அவரும் அவரது காதல் கணவரான பகத்துவம் சைக்கிள் ஓட்டுகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வீடியோவுடன் நஸ்ரியா "இன்னொரு வருடம் பைத்தியக்காரத்தனம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இந்த நேரத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். கடவுளே இது ஒரு சவாரி என எழுதி இருந்தார். இந்த பதிவானது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து ரசிகர்கள் ஹேப்பி அனிவர்சரி மற்றும் இருவருக்கும் இன்னும் பல இனிய ஆண்டு விழா என தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...சலுகைகள் கொடுத்தும் வேலைக்கு ஆகல ..பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் லால் சிங் சத்தா
முன்னதாக பகத்பாசிலின் 40 வது பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நஸ்ரியா, ' பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் ஹஸ்பண்ட் வயதுக்கு ஏற்றார் போல் வயோதிகம். வயதானாலும் நல்லவை வரவில்லை என எழுதியிருந்தார். அந்த புகைப்படத்தில் பகத் பாசில் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தது. ரசிகர்களை கவலை கொள்ள வைத்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட வீடு வாங்கிய மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்மூட்டி!
சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற கமலின் விக்ரம் படத்தில் பகத் இடம் பெற்றிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். உளவுத்துறை முன்னாள் அதிகாரியான கமலுடன் இவரின் காட்சிகள் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. முன்னதாக மலையன்குஞ்சு படத்தின் நடித்ததற்காக பகத் பாராட்டப்பட்டு இருந்தார். திரைப்படத்தை மகேஷ் நாராயணன் எழுதியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...பிரபல இயக்குநர் பாரதிராஜாவிற்கு ..திடீர் உடல்நலக்குறைவு..என்ன நடந்தது தெரியுமா?
சஜிமோன் பிரபாகர் இயக்கியிருந்தார். ஒரு மலையடிவார கிராமத்தின் பின்னணிகள் அமைக்கப்பட்ட மலையன் குஞ்சு, 'கடந்த காலத்தில் தனது வாழ்க்கையில் நடந்த சில சோகமான சம்பவங்ளிலிருந்து விடுபட ஆன்மீக மறு பிறப்புக்கு உட்படும் ஒரு மனிதனின் அவலத்தை விவரித்து இருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.