
நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில், சூர்யா தயாரிப்பில்.. இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'விருமன்'. ஒரு வாரத்தை கடந்தும், தொடர்ந்து சிறந்த விமர்சனங்களுடன் வசூல் சாதனை செய்து வருகிறது 'விருமன்' திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இசையில், வெளியான அனைத்து பாடல்களும் தொடர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
இந்த படம் இதுவரை ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், 400க்கும் அதிகமான திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை குடும்பமாக பார்த்து ரசிக்க கூடிய படம் என அனைவரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதே போல், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி... முதல் படத்திலேயே நடிப்பு , ஆட்டம், பாட்டம் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சாண்டி மாஸ்டரை மன்னிக்க மாட்டேன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, நடுராத்திரி மூன்று மணிக்கெல்லாம் சாண்டி மாஸ்டர் என்னை சம்மர் சால்ட் அடிக்க வைத்தாயே, உன்னை மன்னிக்கவே மாட்டேன். ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி சாகசங்கள் நான் செய்ததே இல்லை, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு மட்டும்தான் கண்டிப்பாக இருக்கும், யுவனின் வெறித்தனம்’ என்று பதிவு செய்துள்ளார். 'விருமன் படத்தில் இடம்பெறும் ’வானம் கிடுகிடுங்க’ பாடலில் நடன காட்சி படமாக்கப்பட்டபோது கார்த்தியை சாண்டி சம்மர் சால்ட் அடிக்க வைத்ததை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.