காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்

Published : Aug 20, 2022, 12:54 PM ISTUpdated : Aug 20, 2022, 12:57 PM IST
காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்

சுருக்கம்

நடிகர் அஜித் தரப்பில் இருந்து, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

நடிகர் அஜித் எவ்வித சமூக வலைதள பக்கங்களிலும் இல்லாததால், அஜித் ரசிகர்களுக்கு சொல்ல விரும்பும் கருத்துக்கள் அனைத்தையும், அவரது மேலாளர் மூலம் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது நிபந்தனையற்ற அன்புடன் ரசிகர்கள் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்ட செய்தியை அஜித் தரப்பில் இருந்து அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில் கூறியுள்ளதாவது... '

பொதுவான காரணங்கள்

மேலும் செய்திகள்: ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!
 

காதுகளில் சத்தம் ஒலிக்கிறதா...

ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் ஒலிக்கும் சத்தம் நிலையானதாக இருக்கலாம். அல்லது வந்து போகலாம், இப்படி காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.

இதன் பொதுவான பொதுவான காரணங்கள்...

காதுகளில் சத்தம் ஒலிப்பது அடிப்படை நோய் காரணமாக இல்லாத காரணங்களைக்  கூடகொண்டிருக்கலாம். அதீத சத்தத்தை கேட்பது, தலையில் காயங்கள் ஏற்படுவது, அதிக அளவில் காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை. என சில பொதுவான காரணங்களை குறிப்பிட்டு, 'உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் - நிபந்தனையற்ற அன்புடன் அஜித்' என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ
 

ரசிகர்களின் ஆரோக்கியம் மீது, கொண்ட அக்கறை காரணமாக அஜித் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமணடமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் அஜித் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல ஏர்போர்ட் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த படப்பிடிப்பில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள, நடிகை மஞ்சு வாரியரும் கலந்து கொண்டு நடிக்க உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

kalyani Priyadarshan : அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!