தாராள மனசைக் காட்டிய ஃபகத் பாசில், நஸ்ரியா! வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

By SG Balan  |  First Published Aug 1, 2024, 6:13 PM IST

ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியாவுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனமான ஃபஹத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ் மூலம் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


வயநாடு நிலச்சரிவு பேரழிவை முன்னிட்டு மலையாள சினிமா ஜோடியான ஃபஹத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியாவுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனமான ஃபஹத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ் மூலம் இந்தத் தொகை நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்பு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் கொடுத்தனர். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சமும் கொடுத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

வயநாடு நிலச்சரிவு: பெய்லி பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது! முண்டக்கையில் மீட்புப் பணிகள் தீவிரம்!

லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசபாலி, தொழிலதிபர் ரவி பிள்ளை மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாண ராமன் ஆகியோர் தலா ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்ததாக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். விழிஞ்சம் போர்ட் சார்பில் அதானி குழுமம் மற்றும் கேஎஸ்எஃப்இ ஆகியவையும் தலா ரூ.5 கோடியை அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி வழங்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக சார்பில் ரூ.1 கோடி கேரள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வயநாடு நிலச்சரிவின் சாட்டிலைட் படங்களை வெளியிட்ட இஸ்ரோ! 8 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள்!

click me!