விஜய் டிவி பிரபலமான, KPY பாலா ஏற்கனவே கடந்த ஆண்டு தன்னை தொடர்பு கொண்டு போனில் உதவி கேட்டவர் மகளுக்கு, மீண்டும் சிகிச்சைக்காக வீடு தேடி சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றி உள்ளார் இது குறித்த வீடியோ வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் வாங்கும் பலர்... ஏழை - எளிய மக்களுக்கு உதவ மனம் இன்றி தங்களுடைய எதிர்காலத்திற்காக மேலும், மேலும் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் நிலையில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் பலரின், பாசத்தையும், அன்பையும் பெற்று வருகிறார் பாலா.
விஜய் டிவியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் KPY பாலா. தற்போது சில முக்கிய பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பாலா, பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், மலை கிராமத்தில் உள்ள மக்கள் பயன் பெரும் விதமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார்.
கார்த்தி - அரவிந்த்சாமி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்!
அப்படியே படிப்படியாக முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ், கர்ப்பிணி பெண்கள் செல்வதற்கு ஆட்டோ, கஷ்டப்படும் பெண்களுக்கு கை கொடுத்து தூக்கி விடும் விதத்தில் அவர்களுக்கு உதவிகள் மற்றும் மாணவர்களை தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைப்பது என ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு KPY பாலாவை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர்... தன்னுடைய மகளின் உடல் நிலை குறித்து கண்ணீரோடு கூறினார். தன்னுடைய மகளின் நிலை குறித்து பேசிய அந்த தந்தை, என் மகளைப் பற்றி நீங்கள் உங்களுடைய சமூக வலைதளத்தில் வீடியோ ஏதேனும் வெளியிட்டால் அதன் மூலம் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஃபண்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய மகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்களையும் அவர் பாலாவுக்கு பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ள மனம் இல்லாத பாலா, அந்த பாசமிகு தந்தையை நேரில் சந்தித்து அவரின் மகள் அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட ரூபாய் . 1 லட்சம் கொடுத்தார்.
10 வயசுல பிரஷாந்த் செய்த குறும்புத்தனம்..! வீடே பத்திக்கிச்சு... ஃபயர் என்ஜினுக்கு போன் செய்த அம்மா!
அதே போல் அந்தப் பெண்ணின் பிசியோதெரபி சிகிச்சை ஆகும் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்கு கொடுத்தார். தற்போது அந்தப் பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து, அவர் நன்கு நடக்கும் நிலையில் உள்ளார். மேலும் தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை செய்வதற்காக... ஒரு வருட காலம் கழிந்து மீண்டும் பாலா அந்த நபரின் வீட்டிற்கு சென்று, பிசியோ தெரபி சிகிச்சைக்கு ரூ.45 ஆயிரம் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இது குறித்த வீடியோவை பாலா வெளியிட பலர் மணந்தாரா தங்களின் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.