சிரஞ்சீவியின் ஆதரவாளர்கள் சிலர் அவரது செயலுக்கு ஆதரவாக விளக்கம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பலர் சிரஞ்சீவி முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளனர்.
நடிகர்கள் நாகார்ஜுனா, தனுஷைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும் விமான நிலையத்தில் வைத்து செய்த செயலால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை தள்ளிவிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிரஞ்சீவியின் ஆதரவாளர்கள் சிலர் அவரது செயலுக்கு ஆதரவாக விளக்கம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பலர் சிரஞ்சீவி முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளனர்.
undefined
வைரல் வீடியோவில், சிரஞ்சீவியும் அவரது மனைவி சுரேகாவும் விமான நிலையத்தில் உள்ள லிப்டிலிருந்து வெளியேறுவதைக் காண முடிகிறது. அப்போது அங்கிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவர் சிரஞ்சீவியுடன் செல்ஃபி எடுக்க அருகில் செல்கிறார். ஆனால் சிரஞ்சீவி அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாகச் செல்கிறார்.
EPFO கணக்கு இருந்தால் போதும்! ரூ.50,000 நேரடியா உங்க அக்கவுண்ட்லயே டெபாசிட் ஆகும்!
ముందు నడుస్తున్న ఫిమేల్ ఎయిర్లైన్స్ స్టాఫ్ ఫోటో అడిగిన వ్యక్తిని అడ్డు తప్పుకోమని సైగ చేసింది. లాంగ్ ఫ్లైట్ జర్నీ చేసి, కుటుంబంతో వెళ్తున్న వ్యక్తికి రెండు సార్లు అడ్డంగా నిలబడి విసిగించటం అసలు కరక్టేనా? సివిక్ సెన్స్ అనేది ఒకటి ఏడ్చి చచ్చింది కదా!!
చిరంజీవిగారు మంచోడు కాబట్టి… pic.twitter.com/NLSThY6Pd2
அந்த நபர் தொடர்ந்து பிடிவாதமாக சிரஞ்சீவியைப் பின்தொடர்ந்து சென்று செல்ஃபி எடுக்க முயல்கிறார். கடுப்பான சிரஞ்சீவி, அந்த ரசிகரின் முதுகில் கை வைத்துத் தடுத்து தூர தள்ளிவிட்டு தன் வழியில் நடந்து செல்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பலர் சிரஞ்சீவியின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர். சில மட்டும் சிரஞ்சீவிக்காக முட்டிக்கொடுத்து விளக்கம் கொடுக்கிறார்கள். குடும்பத்துடன் பயணிக்கும்போது, அதுவும் நீண்ட நேர விமானப் பயணத்துக்குப் பின் வருபவரை இப்படி தொந்தரவு செய்யலாமா என்று நியாயம் கேட்கிறார்கள்.
சிரஞ்சீவி தனது வரவிருக்கும் படமான விஸ்வம்பராவின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பாரிஸ் சென்றனர். அவருடன் அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் அவர்களது மகள் க்ளின் காரா கொனிடேலா ஆகியோர் சென்றிருந்தனர்.