
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பல இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில், மழைநீர் தேங்கியும் அவ்வபோது லேசான நிலச்சரிவும் ஏற்பட்டு வந்த நிலையில்... நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை 4 மணிக்குள் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் உடமைகளை இழக்க நேரிடும் வகையிலும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் 200க்கும் மேற்பட்டோரின் வீடுகள் நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. 300க்கும் மேற்பட்ட மக்கள், மண்ணில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயனை ஃபோனில் தொடர்பு கொண்டு இந்த கோரச் சம்பவம் குறித்து விசாரித்தனர். மத்திய அரசு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடும், காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!
மேலும் இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தன்னார்வலர்கள், என ஒருவருக்கொருவர் மண்ணில் புதைந்து உயிருக்கு போராடும் பலரை மீட்டுக் கொண்டிருக்கும் நிலையில்... மருத்துவம், உணவு போன்றவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரண பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.
ஏற்கனவே நடிகர் விஜய் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னுடைய வருத்தத்தையும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திய நிலையில், தற்போது கமலஹாசன் ட்விட்டரில் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது... "கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.
போட்ரா வெடிய... தலைவரின் 'ஜெயிலர் 2' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.