Radhika Sarathkumar : YouTube சேனல்கள் மூலம் பலர் எல்லைமீறி பல விஷயங்களை செய்வதாக கடுமையான புகார் ஒன்றை அளித்துள்ளார் நடிகை ராதிகா.
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அதை பற்றிய விமர்சனத்தை தெரிந்துகொள்ள பல நாள் பொறுத்திருக்க வேண்டும். அதுவும் டிவியில் சொல்லும் விமர்சனத்தை, அல்லது செய்தித்தாளில் படிக்கும் விஷயத்தை வைத்து தான் படத்தை மக்கள் கணித்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
இன்று ஒரு படம் வெளியாகிறது என்றால் முதல் ஷோ ஆரமிக்கும் முன்பே, தியேட்டரில் கூட்டம் எப்படி இருக்கு? படத்தின் இன்ட்ரோ எப்படி இருக்கு? First Half எப்படி இருக்கு? என்று டிசைன் டிஸைனாக விமர்சனங்கள் வெளியாகிறது. அதுவும் ரசிர்கள் தலையில் கை வைத்திருப்பது போன்ற படங்களை தான் கட்டாயம் Thumbnailல் வைக்கிறார்கள் Youtuberகள்.
சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!
"சரி படங்களின் விமர்சனத்தோடு நிறுத்திவிடுகிறார்கள் என்றால், அதுவும் இல்லை. சினிமாகாரர்கள் பற்றிய அவதூறு பேச்சுக்கள் தான் இப்பொது இணையத்தில் அதிகமாகிவிட்டது. வாய்க்கு வந்தபடி யாரை பற்றி என்னவேண்டுமாலும் பேசும் சூழல் இப்பொது வந்துவிட்டது. தணிக்கை என்ற ஒன்று இல்லாமல் இஷ்டத்துக்கு ஆடி வருகின்றார்கள் Youtube சேனல் வைத்திருப்பவர்கள்" இப்படி எல்லாம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பிரபல நடிகை ராதிகா.
"பத்திரிகையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் பயனற்ற சில நபர்களால் இன்று பலரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதை தீப்பந்தம் பிடித்து பார்த்தவர்களை போல பேசுகிறார்கள். ஆகவே இதுபோன்ற Youtube சேனல் மற்றும் அதை நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
அதற்கு உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பர் கூறியுள்ளார் ராதிகா.
"மொத்தமா முடிச்சுவிட்டீங்க போங்க" லைகாவை தலையில் துண்டு போட வைத்த 5 தமிழ் பட இயக்குனர்கள்!