பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன், புகைபிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும், 34 வயதாகும் கிருத்தி சனோன்... சமீபத்தில் தன்னுடைய காதலர் கபீர் பாஹியா மற்றும் சகோதரி நூபுர் சனோனுடன் தன்னுடைய பிறந்தநாளை கிரீஸ் நாட்டில் கொண்டாடியதாக கூறப்பட்டது. அப்போதைய கொண்டாட்டத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ என கூறி Reddit சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும்... ரசிகர்களும் தங்களின் கருத்தை வெளிப்படையாக கூறி வருகின்றனர். ஒருதரப்பினர், ஒரு நடிகை அவரின் விடுமுறையை கொண்டாடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அவர் என்ன செய்கிறார் என்பதை ஆராய்வது அவரின் சுதந்திரைத்தை பறிக்கும் செயல் என கூறி வருகிறார்கள்.
இன்று ஒரு படத்திற்கு 25 கோடி வாங்கினாலும் அந்த சந்தோசம் கிடைக்கல! முதல் சம்பளம் குறித்து பேசிய நானி!
அதே நேரம் இன்னொரு தரப்பினர் கிருத்தி சனோன் தனது பழைய பேட்டி ஒன்றில், தனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை என்றும்... "பரேலி கி பர்ஃபி" படத்தில் தனது பாத்திரத்திற்காக புகைபிடிக்க வேண்டியிருந்தது என் அவர் கூறியதை சுட்டி காட்டி... இப்போது புகைபிடித்து கொண்டிருப்பதால், அவர் பொய் சொன்னாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இந்த வீடியோவில் அவரின் முகம் சரியாக தெரியாத நிலையில் இது கிருத்தி சனோனாக இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் என கூறப்படுகிறது. பிரபலங்கள் பற்றி வதந்தைகள் பரவுவது புதிய விஷயம் இல்லை என்றாலும், கபீர் பஹாரியாவுடன் இருப்பது யார் என்பதை அறிந்துகொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர். கபீர் - கிருத்தி சனோன் காதலித்தாக கூறப்பட்டு வந்தாலும், இதுவரை அவர்கள் தங்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
நடிகை கிருத்தி சனோன்... பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவரை தென்னிந்திய திரையுலகில் பிரபலமடைய வைத்தது, கடந்த ஆண்டு ராமாயணத்தை மையமாக வைத்து பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் தான். இதில் சீதையாக கிருத்தி சனோன் நடித்திருந்தார். 500 கோடி பட்ஜெட்டில் 3டி அனிமேஷன் படமாக எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது மட்டும் இன்றி சில சர்ச்சைகளுக்கும் வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது.