திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் திடீர் ரைடு நடத்திய அமலாக்கத்துறை

By Ganesh A  |  First Published Jul 30, 2024, 9:22 AM IST

சென்னை அசோக் நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக பிரபலமானதைக் காட்டிலும் சோசியல் மீடியா மூலம் அதிகம் பிரபலம் ஆனவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிஃப்ட் உள்ளிட்ட சில படங்களை தன்னுடைய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணத்துக்கு பின் இவரைப்பற்றி விமர்சனங்களும் அதிகளவில் வந்தன.

கடந்தாண்டு மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர், கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறை தண்டனையும் அனுபவித்தார். கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக கூறி சென்னை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வாங்கிவிட்டு ரவீந்தர் ஏமாற்றிவிட்டதாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... வட போச்சே... ரஜினியின் பிளாப் படத்துக்கு ஆசைப்பட்டு ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

சுமார் ஒரு மாத சிறை தண்டனைக்கு பின்னர் நிபந்தனை ஜாமின் பெற்ற ரவீந்தர், விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் ரவீந்தரின் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் சந்திரசேகரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக அவர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் நடக்கும் இந்த திடீர் சோதனையால் கோலிவுட்டில் பரபரப்பு நிலவி வருகிறது. 

இதையும் படியுங்கள்... ஒரு கோடி கொடுத்தா கூட நான் பண்ணமாட்டேன்... என் மகன் ஸ்ரீஹரி முதல் படத்திலேயே தைரியமா பண்றான்- வனிதா நெகிழ்ச்சி

click me!