- Home
- Gallery
- "மொத்தமா முடிச்சுவிட்டீங்க போங்க" லைகாவை தலையில் துண்டு போட வைத்த 5 தமிழ் பட இயக்குனர்கள்!
"மொத்தமா முடிச்சுவிட்டீங்க போங்க" லைகாவை தலையில் துண்டு போட வைத்த 5 தமிழ் பட இயக்குனர்கள்!
Kollywood Directors : தளபதி விஜயின் "கத்தி" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில், திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கிய நிறுவனம் தான் லைகா.

Maniratnam
கோலிவுட் உலகில் இப்பொழுது அதிக அளவிலான திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று தான் லைகா. ஆனால் அந்த லைகாவையே கலங்கடிக்கும் வண்ணம் சில இயக்குனர்களின் திரைப்படம் மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "செக்கச் சிவந்த வானம்", பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களை லைகா நிறுவனம் தான் தயாரித்தது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தவிர, மற்ற இரு படங்களும் பெரிய அளவில் லைகாவிற்கு லாபமாக அமையவில்லை.
போட்ரா வெடிய... தலைவரின் 'ஜெயிலர் 2' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
P Vasu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "சந்திரமுகி" திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. சிவாஜி ப்ரொடக்ஷன் நிறுவனத்திற்கு பெரும் வெற்றியாக அந்த படம் அமைந்தது. ஆனால் அந்த படத்தின் 2ம் பாகத்தை லைகா துணையோடு இயக்கினார் பி. வாசு. இறுதியில் என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த கதை தான்.
aishwarya rajinikanth
பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றிய லைகா, அண்மையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் இணைந்து பயணித்தது. அந்த படம் தான் லால் சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே நடித்திருந்தும் படம் கிக் ஸ்டார்ட் ஆகவில்லை. Hard Disk போன இடம் தெரியாதது போல, OTTயிலும் சென்ற இடம் தெரியாமல் போனது Lal Salaam படம்.
shankar
சங்கரின் கனவு திரைப்படமான "இந்தியன்" படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. ஆனால் அண்மையில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிலான வசூலை பெறவில்லை. சுஜாதா இல்லாதது இந்த தோல்விக்கு காரணம் என்றும், படத்தின் நீளம் ஒரு காரணம் என்றும் பலரும் பலவாறு கூறினாலும் வெந்து, நொந்து கிடப்பது என்னமோ அந்த படத்தை தயாரித்த லைகா தான்.
sundar c
அதேபோல கடந்த 2019ம் ஆண்டு வெற்றி இயக்குனர் சுந்தர் சி இயக்கி, சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "வந்தா ராஜாவா தான் வருவேன்" என்கின்ற திரைப்படம். வசூலும் கூட "வந்தா தான் வருவேன்" என்று சொல்வதை போல கொஞ்சமாகத்தான் வந்தது. அதுவும் லைகா நம்பி ஏமார்ந்து படங்களில் ஒன்று.
வயநாடு நிலச்சரிவு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது.! கனத்த இதயத்தோடு தளபதி விஜய் போட்ட பதிவு!