போட்ரா வெடிய... தலைவரின் 'ஜெயிலர் 2' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த, 'ஜெயிலர் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

Jailer 2 update:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சமீப காலமாக தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெற்றி பெரும் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
Nelson Dilip Kumar's Jailer Movie
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் உலக அளவில், சுமார் 650 கோடி வசூல் சாதனை செய்ததால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது.
Jailer 2 Produced Sun Pictures:
'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தையும், சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது. அதே போல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திரைப்பட புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் யோகி பாபுவிடம், 'ஜெயிலர்' படம் குறித்து கேள்வி எழுபட்டது.
Yogi Babu about Jailar 2:
அப்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரஜினியுடன் இரண்டாம் பாகத்திலும் காமெடியனாக நடிப்பதை உறுதி செய்த அவர், கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகும் என கூறினார்.
சீதையாக நடித்த நடிகை கிருத்தி சனோனா இப்படி? சிக்கிய வீடியோ.. குவியும் கண்டனம்!
Rajinikanth Upcoming Movies:
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதே போல் போல் இயக்குனர் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு 'ஜெயிலர் 2' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார் என கூறப்படுகிறது. எப்படியும் 'கூலி' படம் ரிலீசுக்கு முன்னரே, 'ஜெயிலர் 2' குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.