- Home
- Gallery
- வயநாடு நிலச்சரிவு: கேரளாவுக்குக் கைகொடுக்கும் விக்ரம்! நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுத்த தங்கலான்!
வயநாடு நிலச்சரிவு: கேரளாவுக்குக் கைகொடுக்கும் விக்ரம்! நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுத்த தங்கலான்!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் விக்ரம் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார்.

Actor Chiyaan Vikram donates 20 lakhs to Wayanad
தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பிரியமான நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். அவர் கேரள மக்கள் மீதான தனது பாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
Chiyaan Vikram donates Rs. 20 lakhs
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் விக்ரம் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார். இயற்கை பேரிடரின்போது இரக்கத்துடன் தானாக முன்வந்து ஆதரவு அளித்ததற்காக விக்ரம் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Kerala Landslide Tragedy
தொடர் மழை காரணமாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
Chiyaan Vikram helps Wayanad
பல மீட்புக் குழுக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளனர்.
Kerala Wayanad Landslides
கமல்ஹாசன், விஜய் உட்பட கோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலர் சமூக ஊடகங்கள் மூலம் வயநாடு மக்களுக்கு தங்கள் பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர். நிதி உதவியும் அளிக்கின்றனர்.
Chiyaan Vikram in Kerala
சமீபத்தில் கேரளா சென்ற சியான் விக்ரம் தனது 'தங்கலன்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கொல்லத்தில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவிலும் பங்கேற்றார்.