
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது இதில், அவரை பற்றி பேசி இயக்குனர் டி.ராஜேந்தர் கண் கலங்கியது அனைவரது மனதையும் உருக வைத்து விட்டது.
மேலும் செய்திகள்: இதுக்கு டவல் கட்டியே போஸ் கொடுத்திருக்கலாம்!! ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் பார்வதி நாயர்!!
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த வருடம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வந்த திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஒட்டு மொத்த திரையுலகமே தங்களது அஞ்சலியை செலுத்தியது.
இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இனிய குரலில் இசையுலகை ஆண்ட அவருடைய பிரிவை ஏராளமானோரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் செய்திகள்: சமந்தா - நயன்தாராவின் கலவையோ... ஒவ்வொரு போஸிலும் வியக்க வைக்கும் நடிகை அதுல்யா..! கியூட் போட்டோஸ்..
இந்நிலையில் நேற்று இவரது முதலாம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்ட நிலையில், எஸ்.பி.பி.யின் குண நலன்கள், மறக்க முடியாத சந்திப்புகள், அவருடைய குறும்பு பேச்சுகள் என இளையராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர். திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனி திரை இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு எஸ்.பி.பி திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் அவருடனான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
மேலும் செய்திகள்: தனிமை படுத்தப்பட்ட போட்டியாளர்கள்... பிக்பாஸ் வீட்டின் உள்ளே உறுதியாக செல்லும் 9 பேர் யார் யார் தெரியுமா?
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தரும் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினார். அப்போது ஏன் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்பதை கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்... " தன்னுடைய படத்தில் இடம்பெற்ற வாசமில்லா மலரிது பாடலை பாடி காட்டினார் மிக அருமையாக பாடினார். அதை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது. அவர் பாடும் போது கூட கண் மூடி பார்த்திருக்கிறேன், வாய் மூடி பார்த்தது இல்லை. அப்படி பார்க்கவும் என்னால் முடியாது. அதனால் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட நான் கலந்து கொள்ளவில்லை என, உருக்கமாக தெரிவித்தார்". இது அங்கிருந்தவர்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.