திடீர் என நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்? இப்போது வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Published : Sep 26, 2021, 06:19 PM IST
திடீர் என நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்? இப்போது வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

சுருக்கம்

நடிகர் பிரபு (Prabhu) திடீர் என உடல் எடை குறைந்து காணப்பட்டதால், அவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகர் பிரபு திடீர் என உடல் எடை குறைந்து காணப்பட்டதால், அவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: தனிமை படுத்தப்பட்ட போட்டியாளர்கள்... பிக்பாஸ் வீட்டின் உள்ளே உறுதியாக செல்லும் 9 பேர் யார் யார் தெரியுமா?

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, ஒரு வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். 80 பது, மற்றும் 90 களில்...  நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது வித்தியாசமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும்  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.

குறிப்பாக இவரது அழகு... புசு புசுவென்று இருப்பதும், அவர் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியும் தான். ஆனால் திடீர் என சமீபத்தில் வெளியான இவரது புகைப்படம் ஒன்று பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியது. நடிகர் ரஹுமானுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் இவர் மாறி, உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் செய்திகள்: நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை குறித்து தீயாக பரவும் தகவல்..!!

 

தற்போது மீண்டும் உடல் எடை கூடி, பழைய பிரபுவாக மாறி விட்டார். ஏன் திடீர் என இவர் உடல் எடையை குறைத்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் முடிவடைந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தான் பிரபு மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இந்த தகவல் வெளியாகி இவருக்கு நடிப்பின் மீதான டெடிகேஷனை வெளிப்படுத்தியுள்ளது என, ரசிகர்கள் பலர் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!