
பிரபல நடிகர் சித்தார்த்துக்கு, திடீர் என லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். அதே நேரத்தில் முன்பை விட இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகவே உள்ளது.
மேலும் செய்திகள்: பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமான பிகினி உடையில்... அமலா பால் வெளியிட்ட கடற்கரை போட்டோ ஷூட்!!
ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், முடிந்த வரை தான் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் வித்தியாசம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் திகில் திரைப்படமான 'அருவம்' படம் வெளியானது. தற்போது தெலுங்கில் ஒரு படம் உட்பட தமிழில் டக்கர், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? டாப் மட்டும் அணிந்து கவர்ச்சி அட்டகாசம் செய்யும் நடிகை வைபவி சாண்டில்யா..!!
மேலும் நடிகர் சித்தார்த், அஜய்பூபதி இயக்கத்தில் 'மகா சமுத்திரம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துடன் முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நடித்துள்ளார். நாயகிகளாக அதிதிராவ், அனு இமானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது, இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் சித்தார்த் மட்டும் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அஜய்பூபதி நடிகர் சித்தார்த் அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்: அமீகானுக்கு இரவு பார்ட்டி வைத்த நாகார்ஜுனா குடும்பம்..!! மீண்டும் சர்ச்சை பேச்சுக்கு இடம் கொடுத்த சமந்தா..!!
எனவே சித்தார்த்தின் ரசிகர்கள் பலர், அவருக்கு என்ன ஆனது? எதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என? தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதுகுறித்து, விரைவில் நடிகர் சித்தார்த் பதிலளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.