தெலுங்கு இயக்குனருடன் டும்.. டும்.. டும்… அனுஷ்கா-வின் திருமணம் குறித்து தீயாய் பரவும் தகவல்…….

Published : Sep 25, 2021, 11:03 AM IST
தெலுங்கு இயக்குனருடன் டும்.. டும்.. டும்… அனுஷ்கா-வின் திருமணம் குறித்து தீயாய் பரவும் தகவல்…….

சுருக்கம்

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து பின்னர் அவர் அதனை மறுப்பதும் வாடிக்கை. பாகுபலி வில்லன் நடிகர் ராணாவை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக முதலில் தகவல் பரவியது.

பின்னர் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் வலையில் விழுந்ததாகக் கூறப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஜோடி சேர்ந்ததால் அது உறுதி என நம்பிய ரசிகர்களுக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்தார் அனுஷ்கா.

தென்னிந்தியாவில் ராஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரரை அனுஷ்கா திருமணம் செய்யவிருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துவிட்டார். இந்தநிலையில் தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. இம்முறையாவது அனுஷ்காவின் மறுப்பேதுமின்றி அவரது திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!