நயனுக்காக ரூ.17 லட்சத்தை செலவழித்த வாரிசு நடிகர்….. எல்லாத்துக்கும் ராசி தான் காரணமாம்…!

Published : Sep 24, 2021, 08:41 PM ISTUpdated : Sep 24, 2021, 08:43 PM IST
நயனுக்காக ரூ.17 லட்சத்தை செலவழித்த வாரிசு நடிகர்….. எல்லாத்துக்கும் ராசி தான் காரணமாம்…!

சுருக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். ராசி எண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். ராசி எண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளார்.

தெலுங்கு சினிமா நடிகர்களை பொறுத்தவரை சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது அதிரடிகளை செய்வார்கள். அந்தவகையில் தற்போது தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருப்பவரும் வாரிசு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர். Lamborghini Urus Graphite Capsule காரை சுமார் மூன்று கோடியே 16 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்தியாவில் இந்த சொகுசு காரை வாங்கிய முதல் திரை பிரபலம் ஜூனியர் என்.டி.ஆர்.தான்.

இந்நிலையில் தான் வாங்கிய புதிய காருக்கு 9999 என்கிற பதிவு எண்ணை பெற ரூ.17 லட்சத்தை செலவு செய்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஒன்பதாம் நம்பர் தமக்கு ராசி என்பதால் அடம்பிடித்து இந்த பதிவெண்ணை அவர் வாங்கியிருக்கிறார். பல கோடி ரூபாய்க்கு கார் வாங்கியவருக்கு, சில லட்சங்கள் பெரிய செலவு இல்லை என்று அவரது ரசிகர்கள் சிலாகித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் ராம் சரண் ரூ.4 கோடிக்கு புதிய சொகுசு காரை வாங்கியிருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் புத்தம் புதிய சொகுசு கார்களை வாங்கிக் குவிப்பது அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!