தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கேயாரின் மனைவி இந்திரா உடல்நலக் குறைவால் காலமானார்.
ஈரமான ரோஜாவே, மாயா பஜார், இரட்டை ரோஜா, அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கேயார் என்று திரையுலகினரால் அழைக்கப்படும் கோதண்ட இராமையா. இவர் பல படங்களை தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தவரும் இவரே.. தென்னிந்திய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியான கேயார், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். அத்துடன் திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் அறக்கட்டளை, விருது குழுக்கள் பலவற்றிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
திரையுலகின் துயரங்களை ஓடி, ஓடி துடைக்கும் கேயாரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பல்துறை வித்தகரான கேயாருக்கு அன்பான மனைவி, ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக கேயாரின் மனைவி இந்திரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்திரா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனைவியை இழந்து வாடும் கேயாருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.