தளபதி 66 படம் குறித்து வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!! செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் விஜய்!!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 5:04 PM IST
Highlights

தளபதி விஜய்யின் (Vijay)  66 ஆவது படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளிவந்த போதிலும், தற்போது இதுகுறித்து படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய்யின் 66 ஆவது படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளிவந்த போதிலும், தற்போது இதுகுறித்து படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்   'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த பாதத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லியில் நடந்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக வைரலாகினர்.  இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: தனிமை படுத்தப்பட்ட போட்டியாளர்கள்... பிக்பாஸ் வீட்டின் உள்ளே உறுதியாக செல்லும் 9 பேர் யார் யார் தெரியுமா?

 

தளபதி விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் செய்திகள்: நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை குறித்து தீயாக பரவும் தகவல்..!!

 

இந்த நிலையில் தற்போது, விஜய்யின் 66 ஆவது படம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்த தகவலை வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். வம்சி இயக்கும் இந்த படத்தை, தெலுங்கில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள, தில் ராஜு, தன்னுடைய ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 66 பட தகவலை உறுதி செய்துள்ளனர். தளபதி விஜய், இந்த புகைப்படத்தில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார்.

மேலும் செய்திகள்: பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமான பிகினி உடையில்... அமலா பால் வெளியிட்ட கடற்கரை போட்டோ ஷூட்!!

 

மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணைவது மகிழ்ச்சி என்றும், இந்த படம் குறித்த மற்ற முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுடன் விரைவில் இப்படம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!