பிரபல நடிகையை கரம் பிடித்த 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

Published : Sep 07, 2022, 09:22 PM IST
பிரபல நடிகையை கரம் பிடித்த 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

சுருக்கம்

'8 தோட்டாக்கள்', 'குருதி ஆட்டம்', போன்ற படங்களை இயக்கிய, இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்..  இன்று பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தமிழில் மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் மிஷ்கினிடம், உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் அந்த படத்தில் அறிமுகமான நடிகர் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஆகியோருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தில்,  தற்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அதர்வா கபடி விளையாட்டு வீரராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி நடித்தார். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மேலும் செய்திகள்: சமந்தா அணிந்த அதே கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..! அப்பட்டமா காப்பி அடித்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள்
 

தற்போது தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இரு குடும்பத்தினர் மத்தியில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளார். இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், குடும்பத்தினர் மற்றும் இருவரது நண்பர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 'நாதஸ்வரம்' சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண் மகள் ஜீனத்..! வைரலாகும் புகைப்படம்!
 

சுகாசினி சஞ்சீவ் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். மேலும் வனம், சர்பத், சீதக்காதி, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?