மதம் மாற சொன்னதால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..ஜெசியை காப்பாற்றுவாரா சந்தியா?

Published : Sep 07, 2022, 03:00 PM IST
மதம் மாற சொன்னதால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..ஜெசியை காப்பாற்றுவாரா சந்தியா?

சுருக்கம்

அருகில் இருக்கும் பெண்ணிடம் எதற்காக வந்தீர்கள் என கேட்டபோது தான் கருக்கலைக்க வந்திருப்பதாக அந்த பெண் கூறவே அதிர்ச்சியடைகிறார் ஜெசி.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. சரவணனின் தம்பியான ஆதி, ஜெசி என்கிற பெண்ணை காதலித்து ஏமாற்றி விடுகிறார். இது குறித்து ஜெசி அவரது  ஆதியின் பெற்றோரிடம் தெரிவிக்கும்போது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அடுத்து சந்தியாவின் உதவியை நாடிய ஜெசி ஆதிக்கு கல்யாணம் செய்வதற்காக பார்த்த பெண்ணை வைத்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். 

பின்னர் சரவணன் சந்தியா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு சம்மதித்த போதினும் சரவணனின் தாய் மற்றும் அவரது பாட்டி  ஆகியோர் வேறு மதத்து பெண் என்பதால் திருமணத்திற்கு தடை போடுகிறார்கள். அதோடு அந்த பெண்ணிடம் போய் தனது அடையாளம் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என கூறுமாறுஆதியிடம் தெரிவிக்கிறார். அதோடு பாட்டியிடம் சம்மம் வாங்க விட்டால் நீ போலீஸ் ஆகும் கனவை விட்டு விட வேண்டும் என சந்தியாவிடமும் கண்டிஷன் போடுகிறார் சரவணனின் தாயர்.

மேலும் செய்திகளுக்கு...இசை வெளியீட்டு விழாவில் செம ஆட்டம் போட்ட த்ரிஷா..சித்தார்த்..பொன்னியின்செல்வன் விழா சுவாரஸ்யங்கள்

கடந்த எபிசோடில்  ஜெசியின் வீட்டிற்கு செல்லும் ஆதி மதத்தை மாற்றிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதாக தனது அம்மா கூறுயதாக தெரிவிக்கிறார். இதனால் ஜெஸ்ஸியின் பெற்றோர்கள் ஆத்திரமாடைகிறார்கள். அந்த சமயத்தில் சரவணனும், சந்தியாவும் அவர்களை சந்திக்க வந்த போதும் இதே போல கோபப்பட்டு பேசுகிறார்கல் ஜெஸியின் தாயும், தந்தையும்.

இதைத்தொடர்ந்து ஜெசியை தனியாக சந்திக்கும் ஆதி இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வோம் .வேறு வழியில் இல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்க ஆத்திரமடையும் ஜெசி அவர் கன்னத்தில் அபாளர் என அறை கொடுப்பதோடு,  போய் உன் தாயை சமாதானப்படுத்தும் வேலையை பார் என அனுப்பி விடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...மஹாலட்சுமிகாக ரவீந்திரன் கட்டிய மஹால்... எத்தனை லட்சத்தில் தெரியுமா?

இன்றைய எபிசோடில் ஜெசியிடம் எதுவும் கூறாமல் அவரது பெற்றோர்கள்  மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு சென்றதும் அருகில் இருக்கும் பெண்ணிடம் எதற்காக வந்தீர்கள் என கேட்டபோது தான் கருக்கலைக்க வந்திருப்பதாக அந்த பெண் கூறவே அதிர்ச்சியடையும் ஜெசி, சரவணன் சந்தியாவை மருத்துவமனை தொலைபேசியில் இருந்து தொடர்பு கொள்கிறார். அவர்களிடம் விஷயத்தை கூறவும் இருவரும் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

இதற்கிடையே ஜெசியை மருத்துவர் அழைத்து செல்கிறார். பரிசோதனைக்கு பிறகு நான் திருமணம் செய்யாவிட்டாலும் குழந்தையை கலைக்க மாட்டேன் என கோபத்தில் கத்துகிறார் ஜெசி. அதை தொடர்ந்து ஜெசியின் தாயார் சரவணன் ,சந்தியா மற்றும் ஜெசியிடம் தாங்கள் ஏன் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்னும் விளக்கத்தை தருகின்றார். அதாவது ஜெசியின் தாய்க்கு  திருமணமாகி இருமுறை கருக்கலைப்பு ஏற்பட்டதால் ஜெசிக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மருத்துவ சோதனைக்கு கூட்டி வந்துள்ளதாக கூறுகிறார். அதோடு கடவுள் கொடுத்த குழந்தையை நாங்கள் எப்படி கலைப்போம் எனவும் உருக்கமாக பேசுகிறார்கள்.  இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்