மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

Published : Sep 07, 2022, 12:07 PM IST
மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

சுருக்கம்

இனியா இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என ஜெனி கூற, இருவரும் சென்று போலீசில் புகார் அளிப்போம் என்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மிகப் பிரபலம். நேற்றைய எபிசோடில் இரண்டாவது திருமணத்திற்கான பேச்சை ராதிகாவின்  அம்மா, அண்ணனை  சந்தித்து பேசிவிட்டு திரும்பும் கோவபி பள்ளிக்கு சென்று இனியாவை சந்திக்கிறாளர். கோபியை பார்த்தவுடன் இனியா கதறி அழ இனிமேல் அப்பா உன்னை விட்டு செல்ல மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்களில் நானே வந்து உன்னை அழைத்து செல்வேன் என்று கூறும் கோபி இனியாவை கையோடு அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்புகிறார். ஆனால் இது குறித்து பாக்யாவிடமோ அல்லது அவரது  வீட்டில் உள்ளவர்களிடமும் தெரிவிக்காமல் இனியாவை கூட்டி செல்கிறார்.

இது எதுவும் தெரியாமல் வீட்டில் இருக்கும் பாக்கிய பள்ளி விட்டு வெகு நேரமாகியும் மகள் வராததால் வேன் ஓட்டுநரை அழைத்து விசாரிக்கிறார்.  ஆனால் அப்போது டிரைவர் இனியா பள்ளி வேனில்  ஏறவே இல்லை என தெரிவிக்கவும். பாக்கிய மிகுந்த பதட்டமைக்கிறார். பின்னர் வழக்கம் போலாவே இதற்கும் நீ தான் காரணம் என பாக்யாவை வெகுவாக சாடுகிறார் கோபியின் தாயார். 

மேலும் செய்திகளுக்கு...ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்

இதற்கிடையில் ஜெனி வந்து பாக்யாவிடம் நீங்கள் சொன்னது போல அப்ளை செய்து விட்டேன் என கூறுகிறார். ஆனால் எதையும் கவனிக்க தயாராக இல்லாத பாக்கியா மகளை நினைத்து வெகுவாக பயப்படுகிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

மேலும் செய்திகளுக்கு...எம். ஜி.ஆர் -யிடம் இருந்து நான் தான் உரிமையை வாங்கினேன்...கனவு நிறைவேறாதது குறித்து கமல் உருக்கம்..

இன்று மகளைக் காண பாக்யா செல்வியுடன் பள்ளிக்குச் செல்ல அங்கு வாட்ச்மேன் அனைவரும் சென்று விட்டதாக கூறுகிறார். நடுரோட்டில் இருந்து கதறி அழும் பாக்யா, வரும் வழியெல்லாம் இனியா நடந்து வருகிறாளா என பார்த்தபடியே புலம்பி கொண்டே வருகிறார்.  அந்த நேரத்தில் செழியனுக்கு போன் செய்யும் கோபி, உங்கள் எல்லோரையும் மிஸ் செய்கிறேன். இனியாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது அதனால் அவளை  வெளியில் அழைத்து சென்று உள்ளேன். இதை வீட்டில் தெரிவிக்கவும் என்று கூறுகிறார்.

மேலும் செய்திகளுக்கு....ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

பின்னர் வீடு திரும்பும் செழியன் வீட்டிற்கு வெளியில் காத்திருக்கும் ஜெனியிடம் கூறாமல் உள்ளே இருக்கும் தன் பாட்டியிடம் மட்டும் தந்தை தங்கையை அழைத்து சென்றது குறித்து கூறுகிறார். அந்த நேரத்தில் வீடு திரும்பும் பாக்கியாவிடம்  இனியா இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என ஜெனி கூற,இருவரும் சென்று போலீசில் புகார் அளிப்போம் என்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்