ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்

Published : Sep 07, 2022, 11:36 AM IST
ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரஜினிகாந்த் தான் இந்த கதாபத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி இருந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வனில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது முன்னணி நாயகர்கள் பலரின் கனவாக இருந்துள்ளது. அதன்படி எம்ஜிஆர், கமலஹாசன் என இந்த நாவலை படமாக்க பலரும் முயற்சி கூட செய்து விட்டனர். தற்போது மணிரத்னத்தின் முயற்சியால் திரைப்படமாக உருவெடுத்துள்ள பொன்னியின் செல்வன் நாவலில் இன்றைய தலைமுறை நடிகர்களான ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு இரண்டு தலைமுறை நடிகர்களான விக்ரம், பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோரும் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளும் ஒரு அங்கமாக உள்ளனர். இந்த படத்தில் நாயகர்களின் கதாபாத்திரங்களை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய உலகநாயகன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பொன்னியின் செல்வனில் பங்கேற்க வேண்டும் என தங்களுக்கு இருந்த ஆசை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர். அந்த வகைகள் கமலஹாசன் தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் மணிரத்தினம் இந்த படத்திற்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பு அளித்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...எம். ஜி.ஆர் -யிடம் இருந்து நான் தான் உரிமையை வாங்கினேன்...கனவு நிறைவேறாதது குறித்து கமல் உருக்கம்..

மேலும் செய்திகளுக்கு....ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

அதேபோல ரஜினிகாந்த் பொன்னியின் செல்வனில் தான் நடிக்க வேண்டும் என வாய்விட்டு மணிரத்தினத்திடம் கேட்டுள்ள தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இதில் பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணிரத்தினத்திடம் ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாங்க இயலாது எனக் கூறி அந்த வேண்டுகோளை மறுத்துள்ளார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.. 

மேலும் செய்திகளுக்கு... நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

அதோடு முன்னதாக ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் வந்தியத்தேவன் வேடத்திற்கு யார் பொருந்துவார்கள் என பிரபல பத்திரிக்கை ஒன்று கேள்வி கேட்டது. அதற்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரஜினிகாந்த் தான் இந்த கதாபத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி இருந்தார். இதை கேட்ட பின்னர் தான் பொன்னியின் செல்வனில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்கிற ஆசை தனக்கு உண்டானது. ஆனால் மணிரத்தினம் தனது ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்தது தனக்கு வருத்தமாக உள்ளது என கூறியிருந்தவர் .வேறு எந்த இயக்குனராக இருந்திருந்தாலும் நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் எப்படியாவது நடிக்க வைத்திருப்பார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னை காலி செய்ய வேலை நடக்குது... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை பிரியங்கா மோகன்
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் கொடுத்த பேரிடி... ரிலீஸுக்கு வந்த புது சிக்கல்..!